1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 8 ஜூன் 2018 (17:40 IST)

ரஜினிக்கு 'க' ராசியில்லையா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் நேற்று வெளியாகி உலகம் முழுவதிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப்பட்டது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தபோதிலும் இன்று பல திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆகவில்லை. 
 
பொதுவாக ரஜினி படம் என்றாலே முதல் நான்கு நாட்கள் திரையரங்குகள் நிரம்பி நல்ல வசூலை தரும். ஆனால் இரண்டாவது நாளே வசூல் பாதியாக குறைந்துள்ளது படக்குழுவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 

இந்த நிலையில் 'க' என்ற எழுத்தில் தொடங்கும் படம் என்றாலே ரஜினிக்கு ராசியில்லை என்று டுவிட்டர் பயனாளி ஒருவர் பதிவு செய்துள்ளார். இதற்கு உதாரணமாக அவர் 'குப்பத்து ராஜா', 'கவிக்குயில்', 'கழுகு', 'கர்ஜனை', 'கை கொடுக்கும் கை', 'கொடி பறக்குது' , குசேலன், 'கோச்சடையான், 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய படங்களை கூறியுள்ளார்.
 
இந்த டுவிட்டர் பயனாளியின் கண்டுபிடிப்பு உண்மையா? என்பதற்கு ரஜினி ரசிகர்கள் தான் பதில் கூற வேண்டும்.