வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (22:16 IST)

அஜித் ரசிகர்களால் ஏற்பட்ட அவமானத்தை ரஜினி ரசிகர்கள் போக்குவார்களா?

உலகின் மிகப்பெரிய திரையரங்கம் என்ற புகழ்பெற்ற பாரிஸ் நகரில் உள்ள லீ கிராண்ட் ரெக்ஸ் என்ற திரையரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ திரைப்படம் திரையிடப்பட உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
முன்னதாக இந்த திரை அரங்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த திரைப்படம் திரையிடப்பட்ட போது அந்த படத்தை பார்க்க வந்த அஜீத் ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் தமிழகத்தில் உள்ள திரையரங்கில் செய்வது போல திரைச்சீலை முன் ஆட்டம் போட்டுள்ளனர். அப்போது ஒரு சில ரசிகர்களால் திரைச்சீலை டேமேஜ் ஆனது. இதனை அறிந்த தியேட்டர் நிர்வாகிகள் உடனடியாக அந்த படத்தை விநியோகம் செய்த நபரிடம் ரூ.5.5 லட்சத்தை அபராதமாக பெற்றனர். மேலும் இனிமேல் தமிழ் திரைப்படங்கள் இந்த திரையரங்கில் திரையிடப்பட்டது என்று அறிவித்தனர் 
 
இந்த நிலையில் ரஜினி நடித்த ‘தர்பார்’ திரைப்படத்தை இந்த திரையரங்கில் திரையிடப்பட்ட வேண்டுமென விநியோகிஸ்தர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒருசில உத்தரவாதங்களை பெற்றுக்கொண்டு திரையிட சம்மதித்து உள்ளதாக தெரிகிறது. மேலும் ‘தர்பார்’ திரைப்படம் திரையிடப்படும் போது ரஜினி ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அஜித் ரசிகர்களால் ஏற்பட்ட அவமானத்தை ரஜினி ரசிகர்கள் போக்குவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்