திரையரங்க வளாகத்திற்குள் டிராக்டரில் புகுந்த ரஜினி ரசிகர்கள்!
திரையரங்க வளாகத்திற்குள் டிராக்டரில் புகுந்த ரஜினி ரசிகர்கள்!
அண்ணாத்த படம் பார்க்க வந்த ரஜினி ரசிகர்கள் டிராக்டருடன் தியேட்டர் வளாகத்திற்குள் நுழைய முனைந்த போது தடுத்து நிறுத்தப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் அண்ணாத்த திரைப்படம் திரையிடப்பட்டது இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக ரஜினி ரசிகர்கள் டிராக்டரில் வந்தனர்
அப்போது டிராக்டரை ஆல்பர்ட் திரையரங்கு வளாகத்திற்குள் செலுத்த முற்பட்டபோது திரையரங்கு நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இதனை அடுத்து போலீசார் வந்து பேச்சுவார்த்தைக்கு பின்னர் ரஜினி ரசிகர்கள் டிராக்டரை வெளியே நிறுத்திவிட்டு படம் பார்க்க தியேட்டருக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது டிராக்டருக்கு அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டதால் திரையரங்கு வளாகத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது