ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2023 (17:30 IST)

அந்த வேலைய நீங்களே பாத்துக்குங்க… லைகாவுக்கு ரஜினி போட்ட கண்டீஷன்!

ரஜினிகாந்த ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுத்து பல வருடங்கள் ஆகின்றன.

ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதன் பின்னர் அவர் நடிக்கும் படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஜினியின் அடுத்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது சம்மந்தமாக ரஜினி, அவரிடம் கதை கேட்டதாகவும் ஆனால் அந்த கதையில் திருப்தி இல்லாததால் அந்த கதையில் நடிக்க மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து பி வாசுவிடம் ரஜினி கதை கேட்டு ஓகே சொன்னதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ஜெய்பீம் புகழ் இயக்குனர் ஞானவேலிடம் கதை கேட்டு அந்த கதைக்கு சம்மதம் சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ரஜினியிடம் அடுத்த படத்தை ஞானவேல் இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது ஞானவேல் இல்லாமல் வேறு சில இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது லைகா நிறுவனத்திடமே கதை கேட்கும் பொறுப்பை ஒப்படைத்து விட்டாராம் ரஜினிகாந்த். ‘நீங்களே கேட்டு நல்ல கதையாக தேர்வு செய்து என்னிடம் அனுப்புங்கள்’ என லைகா நிறுவனத்திடம் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.