வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 10 ஜனவரி 2020 (22:39 IST)

திடீரென நிர்வாகிகளை சந்தித்தார் ரஜினிகாந்த்: அரசியல் கட்சி அறிவிப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படம் நேற்று வெளியாகி ஒரு பக்கம் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் அவர் நடித்து வரும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 168’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இன்று மாலை ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் உடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அரசியல் கட்சியைத் தொடங்கும் தேதி குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாகவும் ரஜினி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருக்கும் நிலையில் ஆறு மாதத்துக்கு முன்னரே கட்சியின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்து மக்கள் மனதில் பதிவுசெய்ய வேண்டும் என்பதால் இன்னும் ஓரிரு மாதங்களில் கட்சியின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும், அதன்பின்னர் முதல் மாநாடு மாநாட்டை ரஜினி நடத்துவார் என்றும் கூறப்படுகிறது