1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2017 (22:05 IST)

26 ஆண்களுக்கு பிறகு... மீண்டும் ரஜினி, மம்முட்டி!!

26 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு ரஜினியும், மம்முட்டியும் இணைந்து நடித்த தளபதி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 
 
நட்பை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ரஜினி மற்றும் மம்முட்டி இருவருக்கும் படத்தில் வலுவான கேரக்டர்களில் நடித்திருப்பார்கள்.  
 
அதன் பிறகு எந்த படத்திலும் இணைந்து நடிக்காமல் இருந்தவர்கள் தற்போது தளபதிக்கு பின்னர் அதாவது 26 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ளனராம்.
 
தீபக் பாவேஷ் இயக்கும் மராத்தி படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த படத்திற்கு பஷாயதன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் நடித்த ரஜினிகாந்த் தற்போது முதல் முறையாக தனது தாய் மொழி படத்தில் நடிக்கிறார்.