வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 8 ஜனவரி 2019 (16:24 IST)

விபத்தில் சிக்கிய ராஜா ராணி சீரியல் நடிகர்: துடிதுடித்து போன காதலி

ராஜா ராணி சீரியல் நடிகர் கார்த்திக் விபத்தில் சிக்கியதால் அவரது காதலியான ஆல்யா மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். 
தனியார் தொலைக்காட்சியில் ஓடும் சீரியல்களில் ரெம்பவே பிரபலமான சீரியல் ராஜா ராணி. இதில கார்த்திக்-செம்பா ரோலில் நடிக்கும் சஞ்சீவ்-ஆல்யாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
 
ஆல்யா நீண்ட வருடங்களாக மானஸ் என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமீபத்தில் இவர்கள் இருவரும் பிரிந்தனர். பின்னர் ஆல்யா சஞ்சீவை காதலிப்பதாக தெரிவித்தார். இருவரும் தாங்கள் ஒன்றாய் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சஞ்சீவ், சில நாட்கள் இணையதளத்தில் இல்லாததைக் கண்டு, ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். நீண்ட நாட்களுக்கு பின்னர் இதற்கு பதிலளித்திருக்கும் அவர் சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கியதால் எந்த பதிவும் போட முடியவில்லை. உங்களின் பிராத்தனையால் விரைவில் குணமடைவேன் என கூறியிருக்கிறார். கார்த்திக்கின் இந்த நிலையைக் கண்டு காதலி ஆல்யா மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளாராம். விரைவில் மீண்டு வர ரசிகர்கள் அவருக்கு ஆறுதல்கள் கூறி வருகின்றனர்.