1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vnoth
Last Modified: ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (12:56 IST)

ராஜமௌலி & மகேஷ் பாபு படத்தில் இணையும் ஹீரோயின் இவர்தானா?

ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளை மையப்படுத்தி உள்ளதால் ஏராளமான காட்டு விலங்குகள் பயன்படுத்தப் பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் விலங்குகளை ஷூட்டிங்கில் பயன்படுத்த ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளதால் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் சென்று பெரும்பாலானக் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ராஜமௌலி.

இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் மற்றும் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக டிஸ்னி ஸ்டுடியோ இணைய, ஜேம்ஸ் கேமரூன் படத்தை வழங்குகிறார். இது சம்மந்தமான போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ரா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.