ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (13:42 IST)

பிக்பாஸ் வீட்டில் புதிய தலைவரான ரைசா; இதனால் தொடரும் பரபரப்பு - வீடியோ!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஓவியா தானாக வெளியேறினார். இதையடுத்து ஓவியாவின் ரசிகர்கள் கொந்தளிப்பில்  உள்ளனர். மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் பலமுறை மக்கள் ஆதரவால் தப்பித்த ஜுலி இம்முறை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

 
இந்த நிலையில் புதிதாக வந்த புரொமோவில் பிக்பாஸ் ரைசாவை புதிய தலைவராக நியமிக்கிறார், ஆனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாத சக்தி, ஆரவ் நீயே தலைவராக இரு என்கிறார். 
 
இதனை தொடர்ந்து சினேகன் வையாபுரியிடம் ஏன் ரைசா தலைவாரா இருந்து போகட்டுமே. எதுக்கு நடுவுல சக்தி ஏன் குறுக்கிடுறார். அப்படினா என்ன அர்த்தம் என்று கூறுகிறார். ரைசாவும், சிநேகன் பேசும்போது ஓவியா மற்றும் ஜூலி விஷயத்தில் காயத்ரி நடந்து கொண்டது சுத்தமாக பிடிக்கவில்லை என்றும், சக்தி இல்லாமல் காயத்ரி இல்லை என்றும் கூறுகிறார்.
 
இந்த புதிய புரொமோ ரசிகர்களுக்கு மேலும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துயுள்ளது.