பிரபல ஓடிடியில் ரிலீஸானது பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்ற ரயில் திரைப்படம்!
எழுத்தாளராகவும், திரைப்பட வசனகர்த்தாவாகவும் அறியப்படும் பாஸ்கர் சக்தி வடக்கன் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் தலைப்பு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதன் பின்னர் ரயில் என தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. இவர், எம்டன் மகன், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியவர்., பல சின்னத்திரை சீரியல்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். இந்த படத்தை டிஸ்கவரி சினிமாஸ் மூலமாக புத்தக பதிப்பாளர் வேடியப்பன் தயாரிக்கிறார்.
வட மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களைப் பற்றிய படமாக வடக்கன் உருவானது. படம் வெளியாகி பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது.
இந்நிலையில் படம் வெளியாகி ஒரு மாதம் கழித்து தற்போது டெண்ட்கொட்டா என்ற ஓடிடியில் இந்த படம் வெளியாகியுள்ளது. ஓடிடி ரிலீஸுக்கு பின்னர் இந்த படத்துக்குக் கூடுதல் கவனம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.