திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 23 ஜூன் 2017 (17:20 IST)

நடிகைகள் அடம்பிடிக்காமல் அட்ஜஸ் செய்ய வேண்டும்; ரகுல் ப்ரீத் சிங் அட்வைஸ்

எல்லா இடங்களிலும் வசதிகள் கேட்டு நடிகைகள் அடம்பிடிக்காமல் ஒத்துபோக வேண்டும் என நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.


 

 
தெலுங்கு முன்னணி நடிகர்களின் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழில் கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் சினிமாவில் தனது பங்களிப்பு பற்றி அவர் கூறியதாவது:-
 
நான் நடிகையாகும் முன்பு பல கஷ்டங்களை அனுபவித்துள்ளேன், பசியால் அவதிப்பட்டுள்ளேன். அனைத்து சூழலையும் எதிர்கொண்டது தற்போது சினிமா உலகில் தாக்குப்பிடிக்க உதவியாக உள்ளது. 
 
படப்பிடிப்பு சில நேரம் காடுகள், குக்கிராமங்களில் நடக்கும். அங்கு தங்க இடம், சுவையான சாப்பாடு போன்றவை இருக்காது. அதற்காக நான் வசதி இல்லை என சண்டைக்கு பாயமாட்டேன். 
 
காடுகளில் படப்பிடிப்பு நடக்கும்போது நடிகைகள் கேரவன் கேட்டு அடம்பிடிக்க கூடாது அட்ஜஸ் செய்ய வேண்டும் என்றார்.