1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 மார்ச் 2018 (17:14 IST)

சிறுவனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அறக்கட்டளை மூலம் ஏழை எளியவர்கள், வசதியில்லா குழந்தைகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.  இதயக் கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனது அறக்கட்டளையின் மூலமாக இலவச ஆபரேஷன் செய்வதற்கான உதவிகளையும் செய்து வருகிறார். 
சமீபத்தில், ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற பிரதீப் என்ற 6 வயது சிறுவனின் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து  முடிந்துள்ளது.
 
சமீபத்தில், ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற பிரதீப் என்ற ஆறு வயது சிறுவனின் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து  முடிந்துள்ளது. இதுவரை 142 குழந்தைகளின் இதய ஆபரேஷன்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் உதவி இருக்கிறார்.
 
இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும்,  வசதியில்லாத குழந்தைகளுக்கு இதயக் கோளாறு இருந்தால் தொடர்பு கொள்ளலாம் என தனது தொலைபேசி எண்ணையும் பகிர்ந்துள்ளார்.