நான் அப்படி சொல்லவேயில்லை! - ஆண்டவரிடம் சரணடைந்த லாரன்ஸ்!
சமீபத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசனை விமர்சித்து பேசியதாக நடிகர் லாரன்ஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தர்பார்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் தான் சிறு வயதிலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகன் என்றும், உலக நாயகன் என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களில் சாணியை அடித்ததாகவும் பேசினார்.
இதனால் கடுப்பான கமல் ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் நடிகர் லாரன்ஸுக்கு கண்டனங்களை தெரிவித்தனர். இதனால் லாரன்ஸை விமர்சித்து சமூக வலைதளங்களில் பலர் பேசி வந்தனர். தான் தவறான அர்த்தத்தில் பேசவில்லை என்று லாரன்ஸ் விளக்கம் அளித்தபோதும் பலர் அதை கேட்க தயாராய் இல்லை.
இந்நிலையில் நேரடியாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனையே நேரடியாக சந்தித்து விளக்கமளித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், கமலுடன் எடுத்துக் கொண்ட போட்டோவையும் பதிவிட்டுள்ளார். இதனால் இந்த சர்ச்சைக்கு இத்துடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.