ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 5 பிப்ரவரி 2022 (16:47 IST)

''ருத்ரன்'' பட இயக்குநருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ராகவா லாரன்ஸ்

'ருத்ரன்’ பட இயக்குநருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளா நடிகர்    ராகவா லாரன்ஸ்.

தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக இருந்து முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் இருப்பவர் ராகவா லாரன்ஸ்.

இவர், முனி, காஞ்சனா, படங்களைத் தொடர்ந்து இந்தியில் இயக்கிய லட்சுமி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது இவர், துர்கா என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்நிலையில்,  இன்று ருத்ரன்  படத்தின் இயக்கு நரும் தயாரிப்பாளருமான கதிரேசனுக்கு பிறந்த நாள் என்பதால் நடிகர்    ராகவா லாரன்ஸ் அவருக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.  மேலும், அதில், இயக்குநர் கதிரேசன் தனது சகோதரர் போன்று இருக்கும் அவர் நல்ல உடல்   நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.