வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (04:42 IST)

ராகவா லாரன்ஸ் நடித்த 'சிவலிங்கா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில் அவர் நடித்த மற்றொரு திரைப்படமான 'சிவலிங்கா' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

'சிவலிங்கா' திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




முன்னதாக 'மொட்டசிவா கெட்டசிவா' மற்றும் 'சிவலிங்கா' ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இரு படத்தின் விநியோகிஸ்தர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒரே நாளில் ரிலீஸ் செய்யும் திட்டம் கைவிடப்பட்டது.

பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கிய இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகாசிங், சதி, வடிவேலு, ராதாரவி, பானுப்ரியா, ஊர்வசி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.