ரஜினி இதை செய்தால் மட்டுமே அவரது கட்சியில் சேருவேன்: ராகவா லாரன்ஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பித்தாலும் அவர் முதல்வர் வேட்பாளராக இருக்க சம்பாதித்தால் மட்டுமே அவரது கட்சியில் இணைவேன் என்று பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்
சற்று முன் அவர் தனது டுவிட்டரில் ’ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் அவர்தான் முதல்வர் வேட்பாளர். இதனை வலியுறுத்தி அவ்வப்போது நான் அவரிடம் தொலைபேசியில் பேசி வருகிறேன். அவர் முதல்வர் வேட்பாளராக இருக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அவரது கட்சியில் நான் இணையப் போவதில்லை
மேலும் நான் மட்டுமின்றி அனைத்து ரஜினி ரசிகர்களும் இதையே தான் விரும்புகின்றனர். இந்த ஒரு முறை அவர் முதல்வர் வேட்பாளராக இருந்துவிட்டு அதன் பின்னர் அவர் காட்டும் நபருக்கு கீழ் நாங்கள் பணிபுரிய தயாராக இருக்கிறோம் என்று ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்