1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 22 மே 2021 (17:26 IST)

என் மானமே போச்சு... வெளிய தல காட்ட முடியல - நிர்வாண வீடியோ குறித்து ராதிகா ஆப்தே!

தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. இவர் நடித்த பல படங்கள் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. தற்போது இணையத்தொடர்களில் அதிகமாக நடித்துவரும் அவரின் நிர்வாணா வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. 
 
இந்நிலையில் அதுகுறித்து மனம் திறந்துள்ள நடிகை ராதிகா ஆப்தே, கடந்த 4 நாட்களாகவே எனக்கு தூக்கமே இல்லை.  எனது கார் டிரைவர், வீட்டு வேலை செய்பவர்கள், உறவினர்கள் யாரேனும் அந்த வீடியோவை பார்த்து இருப்பார்களோ என்ற ஒரு வித அச்சத்தால் வெளியில் கூட தலைகாட்ட முடியவில்லை. 
 
ராம்கோபால் வர்மா இயக்கிய ரத்த சரித்திரா என்ற படத்தில் நடித்தது தான் அது. அதில் நான் ஏமாற்றப்பட்டேன். எதிர்பார்த்த சம்பளம் தரவில்லை. படப்பிடிப்பை திட்டமிட்ட நேரத்தில் தொடங்காமல் எனது நேரத்தையும், திறமையையும் வீணாக்கி எனக்கு சினிமாவில் நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்துவிட்டனர் என கூறியுள்ளார்.