இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட மாதவன்!
தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் மாதவன். சமீபத்தில் அவர் இயக்கிய ராக்கெட்ரி திரைப்படம் தேசிய விருது பெற்றது.
இந்நிலையில் இப்போது மாதவன் மத்திய அரசால் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியோடு மாதவன் நெருக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மாதவனுக்கு பல தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.