1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2024 (15:30 IST)

இனிமே அதுமாதிரி படங்களில் நடிக்க மாட்டேன்… ஆர் கே சுரேஷ் கருத்து!

ஆர் கே சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் காடுவெட்டி. இந்த படத்தில் ஆர் கே சுரேஷ் வன்னியர் சங்க தலைவர் குருவைப் பிரதிபலிக்கும் வகையிலான கதாபாத்திரத்தில் நடித்திருண்ட்ர்ஹார். இந்த படத்தை மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு  சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்தனர்.

இந்த படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் வசூலிலும் தோல்வி அடைந்தது. மேலும் ஆர் கே சுரேஷ் தொடர்ந்து ஒரு சில குறிப்பிட்ட சமுகத்தைப் பிரதிபலிக்கும் பட்டியல் இன மக்களுக்கு எதிரான கதாபாத்திரத்தில் நடிப்பதாக விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில் இனிமேல் அதுபோன்ற படங்களில் தான் நடிக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி “இனிமேல் நான் நடிக்கக் கூடிய படங்கள் பொதுவான படங்களாக இருக்கும்.அது யாரையும் சார்ந்திருக்காது. நான் என்ன சொல்றேன்னு புரியும்னு நெனைக்குறேன்” எனக் கூறியுள்ளார்.