நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு தீவிர சிகிச்சை
நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மாரடைப்பு தீவிர சிகிச்சை
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து கசிந்த தகவலின்படி புனித் ராஜ்குமார் அவர்கள் அபாய கட்டத்தில் இருப்பதாகவும் அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் புனித் ராஜ்குமார் அவர்கள் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டதும் ரசிகர்கள் மருத்துவமனை முன் கூடி உள்ளனர் என்பதும் மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன்தான் புனித் ராஜ்குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் கன்னட திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது