திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (21:03 IST)

'குக் வித் கோமாளி’ புகழ் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு!

'குக் வித் கோமாளி’ புகழ் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்துக்கொண்டிருக்கும் புகழ் காமெடியை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது 
 
'குக் வித் கோமாளி புகழ் ஏற்கனவே அஜித் நடித்து வரும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் அவர் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது அருண் விஜய் நடிக்க இருக்கும் புதிய படத்தில் நடிக்க புகழ் ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது
 
இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். பிரியா பவானி சங்கரின் சகோதரராக புகழ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், ராதிகா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது