குழல் இனிது, யாழ் இனிது இல்லை: எஸ்பிபி குரல் தான் இனிது: தாணு
பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு குறித்து பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
குழல் இனிதா? யாழ் இனிதா? என்று கூறினால் அதற்கு எஸ்பிபி அவர்களின் குரல் தான் இனிது என்று சொல்லலாம். உலகில் உள்ள அத்தனை மொழிகளில் உள்ளவர்களும் அவருடைய குரலுக்கு மயங்காதவர்கள் இல்லை. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என அத்தனை மொழி பேசுபவர்களும் அவரது பாடல்களை ரசித்து கேட்பார்கள்
எஸ்பிபி அவர்கள் அசாத்திய திறமை உள்ளவர். நான் தயாரித்த ‘தையல்காரன்’ படத்திற்கு அவர் இசையமைக்கும் போது அவருடன் பணிபுரிந்த ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக எனக்கு தெரிந்தது. நான் தயாரித்த ஒரு படத்தில் அத்தனை பாடங்களையும் நீங்கள் பாடுங்கள் என்று நான் கூறியபோது, இல்லை எல்லோருக்கும் பிரித்துக் கொடுங்கள், என்னை மாதிரி எத்தனையோ கலைஞர்கள் இருக்கின்றார்கள் அவர்களுக்கும் வாழ்வு வேண்டும் என்று தனக்கு வந்த வாய்ப்புகளையும் சக பாடகர்களுக்கு பிரித்து கொடுத்தார்.
தான் மட்டும் வாழாமல் எல்லாரும் வாழ வைக்க வேண்டும் என்ற ஒரு உண்மையான ஏழை பங்காளன். உலகத்திலேயே சில குரல்கள் உருட்டும், மிரட்டும், ஆனால் இவரது குரல் உருக்கும், ஜெயிக்கும், கொஞ்சும், அழும். அவரது புகழ் வாழ்க
இவ்வாறு கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார்