புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 ஜனவரி 2021 (10:55 IST)

மாஸ்டர் தமிழ் சினிமாவின் மறுமலர்ச்சி… தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ஆதரவு!

மாஸ்டர் படத்தின் காட்சிகளை இணையத்தில் யாரும் பார்க்கவேண்டாம் என தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள திரைப்படமாக மாஸ்ட திரைப்படம் உள்ளது. லோகேஷ் இயக்கியுள்ள அந்த  திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. ஆனால் படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் இணையத்தில் திருட்டுத்தனமாக சிலரால் வெளியிடப்பட்டன. இதனால் அதிர்ச்சியான படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘இது எங்களின் ஒன்றரை வருட உழைப்பு. தயவு செய்து இன்னும் ஒருநாள் காத்திருங்கள் எனக் கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையினரும் மாஸ்டர் படத்துக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் சகோதரரும் பிரபல தயாரிப்பாளருமான எஸ் ஆர் பிரபு ‘மாஸ்டர் வெறும் பண்டிகைக்கால திரைப்படம் இல்லை. இது தமிழ் சினிமாவின் மறுமலர்ச்சிக்கான திரைப்படம். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் மீண்டு வருவதற்கான படம். அமைதியாக இருங்கள். பைரஸியை அகற்றி படத்தைக் காப்பாற்றுங்கள்’ எனக் கூறியுள்ளார்.