1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : வியாழன், 16 நவம்பர் 2017 (13:39 IST)

வம்பு, வைகைப்புயல் மீது நடவடிக்கை பாயுமா?

தயாரிப்பாளர்களின் புகார்களை அடுத்து வம்பு மற்றும் வைகைப்புயல் மீது நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.










 


சொன்ன நேரத்துக்கு ஷூட்டிங் வருவதில்லை என்ற புகார், வம்பு நடிகர் மீது பல காலமாகவே இருந்து வருகிறது. ஆனாலும், தற்போதுவரை அதை அவர் மாற்றிக் கொண்டதாகவே தெரியவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான படத்துக்கு, 29 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் வந்திருக்கிறார். அதிலும் 4 மணி நேரத்துக்கு மேல் அவர் ஷூட்டிங்கில் இருந்ததில்லை.

இதுகுறித்து விசாரிக்கப் போன தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களையும் அவர் மதிக்கவில்லை. இரவு 11 மணிக்கு அவர்களை வரச்சொல்லிவிட்டு, அதிகாலை 5.30 மணிக்குத்தான் வந்து பார்த்தாராம். இதனால், வம்பு மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளதாம்.
அதேபோல், வைகைப்புயலும் இரண்டாம் பாகத்துக்கு ஏகப்பட்ட குடைச்சல் கொடுத்து படத்தைப் பாதியிலேயே வைத்திருக்கிறாராம். இத்தனைக்கும் அந்தப் படத்தைத் தயாரிப்பது மிகப்பெரிய இயக்குநர். அவரையே அலேக்காக டீல் பண்ணும் வைகைப்புயல் மீதும் நடவடிக்கை பாயும் என்கிறார்கள்.