வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (16:29 IST)

முதல்முறையாக குழந்தையின் முகத்தைக் காட்டிய பிரியங்கா சோப்ரா!

நடிகை பிரியங்கா சோப்ரா தன்னுடைய குழந்தை மால்தியின் முகத்தை வெளி உலகுக்கு காட்டாமல் ரகசியமாக வைத்திருக்கிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட வயதில் இளையவர். இதையடுத்து கடந்த  ஆண்டு பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தார்.

இதனை அடுத்து கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வாடகை தாய் மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மால்தி என்ற பெயர் சூட்டியுள்ளனர். இந்த குழந்தை சில மாதங்கள் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற நிலை இருந்ததால் இதை அவர் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடவில்லை. அதையடுத்து சில முறை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டாலும் முகத்தை மறைத்தே வெளியிடுவார்.

இந்நிலையில் முதல் முறையாக குழந்தையின்  முகம் தெரியும்படி, அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.