ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 22 ஜனவரி 2022 (08:31 IST)

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா சோப்ரா!

நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் கணவர் நிக் ஜோனாஸ் ஆகியோர் தங்கள் ரசிகர்களுடன் நல்ல செய்தியைப் பகிர்ந்து கொண்டு உள்ளனர். 

 
பிரியங்கா சோப்ரா மற்றும் பாடகர் நிக் ஜோனாஸ் இருவரும் டிசம்பர் 2018 இல் ஜோத்பூரில் உள்ள அழகிய உமைத் பவன் அரண்மனையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொண்டதாக பிரியங்கா - நிக் ஜோன்ஸ் தம்பதியினர் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளனர்.
 
அந்த பதிவில், நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றோம். இந்த சிறப்புமிக்க தருணத்தில் நாங்கள் எங்கள் குடும்பம் குறித்து கவனம் செலுத்துவதால் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பு அளிக்க கேட்டுகொள்கிறோம் என கேட்டுக்கொண்டுள்ளார். 
 
என்ன குழந்தை பிறந்துள்ளது என்பது குறித்து பிரியங்கா அறிவிக்காத நிலையில் அமெரிக்க ஊடகம் பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை குழந்தை பிறந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
நடிகை ஷில்பா ஷெட்டியும் தனது இரண்டாவது குழந்தையை வாடகை தாய் மூலமாக பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.