புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (15:00 IST)

விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியாமணி!

நடிகை பிரியாமணி தனது கணவரான முஸ்தபா ராஜூவை விவாகரத்து செய்யப்போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

பருத்தி வீரன் படத்தின் மூலம் தன்னை சிறந்த நடிகையாக நிலை நிறுத்திக் கொண்ட பிரியாமணி, தேசிய விருது வரை சென்றார். ஆனால் அதன் பிறகு அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வராததால் கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி எனக் கிடைத்த வேடங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் தொடர் கவனம் பெற்றது.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் முஸ்தபா ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் முஸ்தபா ராஜுவுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்ததாகவும், அவரின் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே பிரியாமணியை திருமணம் செய்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இதை முஸ்தபா ராஜு மறுத்தார். இதனால் பிரியாமணிக்கும் முஸ்தபாவுக்கு கருத்து வேறுபாடு எழுந்து விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகின.

இது சம்மந்தமாக மௌனம் காத்துவந்த பிரியாமணி இப்போது கணவரோடு மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.