அந்தாதூன் படத்தின் மலையாள ரீமேக் ரிலிஸ் தேதி அறிவிப்பு!
அந்தாதூன் படத்தின் ரீமேக்குகள் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் உருவாகி வருகிறது.
கடந்த 2018 ஆம் வருடம் அக்டோபர் மாதம் பிரபல இந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளிவந்த அந்தாதூன் திரைப்படம் உலக அளவில் கவனம் ஈர்த்தது. இதையடுத்து அந்த படத்தை இந்தியாவின் பிற மொழிகளில் ரீமேக் செய்ய மிகப்பெரிய போட்டி நிலவ, தமிழ் பதிப்பை தியாகராஜன் கைப்பற்றினார். அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கேள்வியாக இருந்தது.
அதேபோல மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் பிரம்மம் என்ற பெயரில் உருவாகி உள்ளது. இந்த படம் இப்போது அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளரான ரவி கே சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.