செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (18:07 IST)

ஹெல்மெட் அணியாமல் சென்ற பிரசாந்துக்கு அபராதம்..! எவ்வளவு தெரியுமா.?

Prasanth
ஹெல்மட் அணியாமல் பைக் ஓட்டியதற்காக நடிகர் பிரசாந்திற்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் இந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கும் படம் அந்தகன். நடிகர் பிரசாந்த் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ள நிலையில் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 
 
வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தற்போது நடிகர் பிரசாந்த் படத்திற்கான ப்ரோமோஷன்களை செய்து வருகிறார். அந்த வகையில்  புல்லட் பைக்கில் சென்னை தி.நகரில்  சென்று கொண்டே பிரசாந்த் பேட்டி அளித்தார். அப்போது ஹெல்மட் அணியாமல் தொகுப்பாளனியுடன் அவர் பைக்கில் சென்றார்.


இது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரியவே, ஹெல்மெட் அணியாமல் சென்ற பிரசாந்த் மற்றும் இந்த நேர்காணலை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி ஆகியோருக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.