1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2024 (09:13 IST)

கேஜிஎஃப் 2 கொடுத்த வெற்றியால் கொஞ்சம் அலட்சியமாக இருந்துவிட்டேன்… சலார் 1 குறித்து பிரசாந்த் நீல்!

பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு மற்றும் பிருத்விராஜ் நடித்த சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  ஆனால் ரிலீஸுக்குப் பின் நடந்ததுதான் எதிர்பாராதது. படம் கடுமையான எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.

முதல் பாகத்தின் தோல்வியால் இரண்டு பாகங்களாக உருவான சலார் படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. சலார் முதல் பாகத்தின் தோல்வியால் இரண்டாம் பாகத்தை கைவிடப்போவதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் படக்குழு அதை மறுத்தது. சலார் 2 படத்தில் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் சலார் ரிலீஸாகி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அதுபற்றி பேசியுள்ள பிரசாந்த் நீல் “சலார் 1 படத்துக்குக் கிடைத்த வரவேற்பில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. கேஜிஎஃப் 2 கொடுத்த புகழால் கொஞ்சம் அலட்சியமாக இருந்து விட்டேனோ என்று தோன்றுகிறது. ஆனால் சலார் 2 கண்டிப்பாக என்னுடைய சிறந்த எழுத்துகளில் ஒன்றாக இருக்கும் என்ற உறுதியை நான் அளிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.