செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 19 நவம்பர் 2022 (10:01 IST)

அரசியல் கருத்துகளால் என்னுடன் சேர்ந்து நடிக்க பயப்படுகிறார்கள்… பிரகாஷ் ராஜ் கருத்து!

நடிகர் பிரகாஷ்ராஜ் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவை எதிர்த்து மக்களவைத் தேர்தலில் பெங்களூர் மத்தியத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனாலும் அவ்வப்போது தொடர்ந்து அரசியல் கருத்துகளைப் பேசி வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய அரசியல் கருத்துகளால் சினிமா வாய்ப்புகளை இழந்துள்ளதாக கூறி வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் “நான் பேசும் அரசியல் கருத்துகளால் முன்பு என்னுடன் சேர்ந்து நடித்தவர்கள் இப்போது நடிக்க பயப்படுகிறார்கள்.  அவர்களை யாரும் என்னுடன் நடிக்க வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் அவர்கள் பயத்தின் காரணமாக விலகுகிறார்கள். அவர்களை நான் குறை சொல்லவில்லை” எனக் கூறியுள்ளார்.