செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 24 டிசம்பர் 2018 (20:23 IST)

பிரபாஸின் பண்ணை வீட்டு பங்களாவுக்கு சீல்

பாகுபலி படத்தின் வெற்றியின் மூலம் தென் இந்திய சினிமாவின் ஸ்டார் ஆன பிரபாசின் பண்ணை வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாம். 
 
ஆம், தெலங்கானா மாநிலம் ராயதுர்க பகுதி பன்மக்தா கிராமத்தில் உள்ள 84 ஏக்கர் நிலத்தை சமீபத்தில் அரசு நிலம் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கிருந்த ஆக்ரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. 
 
அந்த பகுதியில்தான் பிரபாஸின் பண்ணை வீடு உள்ளது. அந்த பங்களாவுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால், பிரபாஸ் குறிப்பிட்ட பண்ணை வீடு பகுதி வரைமுறைப்படுத்தப்பட்ட விதியின்படி வாங்கப்பட்டது என வழக்கு தொடர்ந்தார். 
 
ஆனால், வரைமுறைப்படுத்தப்பட்ட விதி என்பது வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்காக வகுக்கப்பட்டிருக்கும் விதியாகும். பிரபாஸ் ஒன்றும் வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர் அல்ல என கூறி இந்த வழக்கு தொடர்பாக தெலங்கானா அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.