அடுத்த ஆறு வருடங்களில் 6 படம்… பிரபாஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பாகுபலிக்குப் பிறகு இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராக மாறினார் பிரபாஸ். இதனால் அவர் நடிக்கும் அனைத்துப் படங்களும் பேன் இந்தியா படங்களாக மாறின. ஆனால் பாகுபலிக்குப் பிறகு அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை.
இந்நிலையில்தான் பிரபாஸ் நடிப்பில் உருவான கல்கி திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் தன்னுடைய வெற்றிப் பாதைக்கு மீண்டும் திரும்பியுள்ளார் பிரபாஸ். அவர் கைவசம் இப்போது பல படங்கள் உள்ளன.
சமீபத்தில் அவர் தன்னுடைய பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார். அதில் அவர் அடுத்த ஆறு ஆண்டுகளில் தொடர்ந்து 6 படங்களில் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. இந்த 6 படங்களுக்காகவும் சேர்த்து அவர் 900 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.