திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2024 (19:19 IST)

8 வருஷம் கழித்து கிடைத்த பிரபல்யம்.. எலான் மஸ்க் சார் ரொம்ப தேங்க்ஸ்! – தப்பாட்டம் ஹீரோ நெகிழ்ச்சி!

Thapatam elon musk
தமிழில் வெளியான தப்பாட்டம் படத்திலிருந்து உலக தொழிலதிபர் எலான் மஸ்க் ஷேர் செய்த மீம் உலக அளவில் வைரலான நிலையில் தப்பாட்டம் பட நாயகன் எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.



சமீபத்தில் உலக பிரபலமான ஆப்பிள் நிறுவனம் மைக்ரோசாஃப்டின் ஓபன் ஏஐ செயற்கை நுண்ணறிவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. இரு நிறுவனங்களுக்கு இடையேயான இந்த ஒப்பந்தத்தால் ஆப்பிள் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படும் என சொல்லி எலான் மஸ்க் மீம் ஒன்றை ஷேர் செய்திருந்தார்.

தமிழில் 2017ல் வெளியான தப்பாட்டம் என்ற படத்தில் நாயகி இளநீரை ஸ்ட்ரா போட்டு குடிக்க, நாயகனோ ஸ்ட்ராவை நாயகியின் வாயில் வைத்து உறிஞ்சி குடிப்பது போல அதில் ஒரு காட்சி இருக்கும். அந்த மீமை பயன்படுத்தி எலான் மஸ்க் ஆப்பிளை கிண்டல் செய்ததால் தற்போது தப்பாட்டம் படம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. படம் வந்த சமயத்தில் கிடைக்காத பிரபல்யம் தற்போது எலான் மஸ்க்கால் கிடைத்துள்ளதால் அந்த படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய தப்பாட்டம் நாயகன் துரை சுதாகர் “சிறு முதலீட்டில் எடுத்த என் படத்தை உலக அளவில் பிரபலம் ஆக்கிய எலான் மஸ்க்கிற்கு நன்றி. இது தமிழ் படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம். இந்த மீம் எலான் மஸ்க் வரை சென்று சேர உதவிய மீம் கிரியேட்டர்களுக்கும் என நன்றிகள்” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K