நடிகர் பூ ராமு இறப்பதற்கு முன் நடித்த கடைசி படத்தில் நடக்கும் மாற்றம்!
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் பூ ராமு சில தினங்களுக்கு முன்னர் காலமானார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.
தமிழ் சினிமாவில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான பூ என்ற படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் பூ ராமு. இப்படத்தை அடுத்து, சூரரைப் போற்று, நீர்ப்பறவை, பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்தார். சில தினங்களுக்கு முன்னர் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நடிகர் பூ ராமு மறைவதற்கு முன்னர் கடைசியாக நடித்த படமாக அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் கழுவேரி மூக்கன் திரைப்படத்தில் நடித்துள்ளார். அவர் காட்சிகள் சில படமாக்கப்பட்ட நிலையில் இப்போது அந்த காட்சிகளை வேறு நடிகர்களை வைத்து படமாக்கும் முடிவில் படக்குழு உள்ளதாக சொல்லப்படுகிறது.