ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 5 நவம்பர் 2021 (18:55 IST)

பொன்ராம் படத்தை குறைகூறிய மணிரத்னம்: என்ன காரணம்?

இயக்குனர் பொன்ராம் படம் சரியில்லை என மணிரத்னம் கூறியதாக பேட்டி ஒன்றில் கூறப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பொன்ராம் இயக்கி யமா எம்ஜிஆர் மகன் என்ற திரைப்படம் நேற்று வெளியானது என்பதும் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இயக்குனர் பொன்ராம் சமீபத்தில் அளித்த பேட்டியில் மணிரத்னம் தயாரித்த நவரசா என்ற ஆந்தாலஜி படத்தில் தன்னுடைய படமும் இணைந்து இருந்தது என்றும் ஆனால் கடைசி நேரத்தில் மணிரத்தினம் அந்த படத்தை தூக்கி விட்டதாகவும் தெரிவித்தார் 
 
தன்னுடைய படத்தின் ஆடியோ சரியில்லை என்பதால் தூக்கி விட்டதாக மணிரத்தினம் கூறினாலும் அவரது பதிலில் தனக்கு திருப்தி இல்லை என பொன்ராம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது