4 மணி வரை காத்திருங்க.. பொன்னியின் செல்வன் 2 அப்டேட்!
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி ஹிட் அடித்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் இன்று வெளியாக உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி உள்ளிட்ட பலர் நடித்து வெளியான சரித்திர படம் பொன்னியின் செல்வன் பாகம் 1. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி உருவான இந்த படம் தமிழ் ரசிகர்கள் இடையே பெரும் வெற்றி பெற்றது.
இதன் இரண்டாம் பாகம் 2023 ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு பொன்னியின் செல்வன் பாகம் 2 குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் பாகம் 2 ரிலீஸ் தேதி அல்லது டீசர் ஏதாவது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit By Prasanth.K