திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 9 ஜூலை 2020 (19:42 IST)

மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம் அனுமதி: அதிர்ச்சி வீடியோ

மருத்துவமனையில் நடிகர் பொன்னம்பலம் அனுமதி
தமிழ் சினிமாவின் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகர் பொன்னம்பலம் காமெடி நடிகராகவும், வில்லன் நடிகராகவும் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக பொன்னம்பலம் இருந்தபோது அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர். பொன்னம்பலம் ஆர்மியும் பரபரப்பாக இயங்கியது
 
அதுமட்டுமின்றி கமல்ஹாசனுடன் பல திரைப்படங்களில் நடித்த பொன்னம்பலம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருடனான நெருக்கம் அதிகமானது. இந்த நிலையில் நடிகர் பொன்னம்பலம் தற்போது சிறுநீரக கோளாறு காரணமாக அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
 
இது குறித்த தகவல் அறிந்ததும் கமல்ஹாசன் அவருக்கு உதவி செய்ததாகவும் அவருடைய குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்டதாகவும் செய்திகள் கூறப்படுகிறது. மேலும் தினந்தோறும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கும் பொன்னம்பலத்திற்கும் போன் செய்யும் கமலஹாசன் பொன்னம்பலத்திற்கு உடல்நிலை குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது