ரிலீஸான சிலமணி நேரத்தில் HD தரத்தில் பொன்மகள் வந்தாள்: தமிழ் ராக்கர்ஸ் அட்டூழியம்
திரையரங்குகளில் ரிலீஸாகும் படங்களையே ஒரு சில மணி நேரத்தில் தியேட்டர் பிரிண்ட்டாகவும், ஒரு சில நாட்களில் HD பிரிண்டாகவும் வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் திரையுலகிற்கே சவாலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று வெளியான ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தையும் சில மணி நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் தனது தளத்தில் வெளியிட்டு இருப்பது படக்குழுவினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிப்பில் ஜெஜெ பெடரிக் இயக்கிய ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் இன்று முதல் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு தற்போது பெருவாரியான பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ஜோதிகா மற்றும் பார்த்திபன் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
இந்த நிலையில் திரைப்படங்களை திருட்டுதனமாக வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ் தன்னுடைய இணையதளத்தில் HD தரத்தில் பொன்மகள் வந்தாள் வெளியிட்டு இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ஓடிடி தளத்தில் எந்த அளவுக்கு தரமான வீடியோவாக கிடைக்கின்றதோ அதே தரத்தில் இந்த படம் தமிழ் ராக்கர்ஸிலும் இருப்பதை பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே தமிழ் சினிமாவுலகிற்கு சிம்மசொப்பனமாக இருந்து வரும் தமிழ் ராக்கர்ஸ் உரிமையாளர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் தற்போது அதன் விஸ்வரூபத்தை கண்டு கோலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்து உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க பொன்மகள் வந்தாள் திரைப்படக் குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது