ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 15 ஜூன் 2017 (23:30 IST)

தயவுசெய்து என் படத்தை பார்க்க தியேட்டருக்கு வராதீங்க: சிம்பு

மூன்று வேடங்களில் சிம்பு, ஸ்ரேயா, தமன்னா நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் முதல் பாகம் வரும் 23ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் அனைத்தும் கிளாமராக இருப்பதால் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது



 


இந்த நிலையில் இன்று ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சிம்பு, என்னை ட்ரோல் செய்பவர்கள் தான் எனக்கு ஊக்கம் அளிக்கின்றனர். அவர்கள் எதிர்க்க எதிர்க்கத்தான் நான் வளர்ச்சி அடைகிறேன். எனவே எனது ஹேட்டர்கள் என்னை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

மேலும் ஹேட்டர்களுக்கு தான் மேலும் ஒரு வேண்டுகோள் வைப்பதாகவும், தயவுசெய்து எனது ஹேட்டர்கள் எனது படத்தை முதல் மூன்று நாட்களுக்கு தியேட்டருக்கு வரவேண்டாம் என்றும் அங்கு எனது ரசிகர்கள் குஷியோடு கொண்டாடி வருவதை நீங்கள் பார்க்க நேரிட்டால் உங்கள் மனது வருத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.