திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 24 அக்டோபர் 2022 (18:54 IST)

இடம்‌ பொருள் ஏவல் படம் ஒரு‌ இலக்கிய‌தரம்- கே.பாலகிருஷ்ணன்

idam porul eval
விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவான இடம் பொருள் ஏவல் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த கே. பாலகிருஷ்ணன் இது ஒரு இலக்கிய தரமிக்க படம் என்று பாராட்டியுள்ளார்.

விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவான இடம் பொருள் ஏவல் என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில வருடங்கள் ஆன நிலையில் தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் இன்று  மாலை ஆறு மணிக்கு இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.

இப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மா நில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’இயக்குனர் சீனு ராமசாமியின் 'இடம் பொருள் ஏவல்' திரைப்படத்தை சிறப்புக் காட்சியில் பார்த்தேன். இலக்கியத் தரம் மிக்க அற்புதமான ஆக்கம். பணத்தின் பின் ஓட்டமெடுக்கும் சமூகத்தின் கால்களை சற்று நிறுத்தி, மனிதர்களை, இயற்கையை, உண்மையை நேசிக்கச் சொல்கிறது இந்தக் கதை’’ என்று பதிவிட்டுள்ளார்.

Edited by Sinoj