வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (11:26 IST)

சம்பளமே இவ்வளவா ? – டல்லடிக்கும் தர்பார் பிஸ்னஸுக்கு இதுவும் ஒரு காரணம் !

ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் வியாபாரம் டல்லடிப்பதற்கு அந்த படத்தில் பணிபுரிந்த முக்கிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் சம்பளமும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

தர்பார் படம் நாளை உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. ஆனால், இதுவரை ரஜினி படத்துக்கு இல்லாத அளவுக்கு இந்த படத்தின் வியாபாரம் மந்தமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான காரணமாக சொல்லப்படுவது படத்தின் பட்ஜெட் எகிறியதுதான் என சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் 225 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. அதில் ரஜினி, முருகதாஸ் மற்றும் நயன்தாராவின் ஆகிய மூவரின் சம்பளம் மட்டுமே 160 கோடிக்கும் மேல் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பட்ஜெட் எகிற இப்போது பிஸ்னஸ் செய்ய முடியாமல் தயாரிப்பு தரப்பு தவிக்கிறது.