பரியேறும் பெருமாள்: வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ், ரஞ்சித்க்கு முக்கிய வேண்டுகோள்
பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்துக்கு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மக்களின் பேராதரவால் நடந்துள்ளதாக பா.ரஞ்சித் தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார் இதனை ரீடுவிட் செய்துள்ள வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ் "ரஞ்சித், அப்படியே பெங்களூர் பக்கமும் சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க. காத்திருப்பு மன அழுத்தத்தையும் கோபத்தையும் உண்டாக்குகிறது" என குறிப்பிட்டுள்ளார்.