உனக்கு சிம்பு தான கதவு திறந்துவிட்டது? விக்னேஷ் சிவனை கதற கதற கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
நானும் ஒருநாள் நிச்சயம் ஆஸ்கார் அருகில் இருப்பேன் என்று இயக்குனரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவனின் டீவீட்டை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்து பலரையும் வெறுப்பேற்றி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு பலரையும் புகைய வைத்துவிடுகிறது.
அந்தவகையில் தற்போது மீண்டும் விக்னேஷ் சிவன் வம்மில் மாட்டியுள்ளார். அதாவது, உலகின் தலை சிறந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா மிக கோலாகலமாக அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு துறைகளில் உள்ளவர்களுக்கு விருதும் வழங்கபட்டது.
இந்த நிலையில் ஆஸ்கார் வென்ற அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் ஒரு போஸ்ட் போட்ட விக்னேஷ் சிவன் , "ஒரு நாள் கதவு திறக்கும், அருகில் இருப்பதே நமது கதவு" என்று ஆஸ்காரை வெல்வேன் என சூசகமாக தெரிவிக்க நெட்டிசன்கள் செம்ம காண்டாகி மரண கலாய் கலாய்த்து வருவதை நீங்களே பாருங்கள்.