''புகை பிடிப்பவர்களுக்கு அபராத தொகை உயர்த்த வேண்டும் ''- பிரபல இயக்குனர்
பொது இடங்களில் புகைப்படம் பிடிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என பிரபல இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின் படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சில புதிய விதிமுறைகளும், புதிய அபராதகங்களும் கூட அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனச் சட்ட திருத்தத்தின்படி புதிய அபராதங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், இதேபோல் பொது இடங்களில் புகைப்படம் பிடிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என பிரபல இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மோகன் ஜி தன் டிவிட்டர் பக்கத்தில், வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை உயர்த்தியது போல பொது இடங்களில் #புகை பிடிப்பவர்களுக்கு அபராத தொகையையும், சிறுவர்களுக்கு #coollip மற்றும் #குட்கா விற்பனை செய்யும் கடைகாரர்களுக்கும் அபராதத்தை 10 மடங்கு உயர்த்தி அறிவிக்க முதல்வர் திரு @mkstalin சார் அவர்களை கேட்டு கொள்கிறேன்..என்று தெரிவித்துள்ளார்.
திரவுபதி, பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மோகன் ஜி என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Sinoj