1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 26 ஜூலை 2023 (15:03 IST)

தமிழ் சினிமா உலகினர் குறுகிய மனப்பான்மையுடன் உள்ளனர்.. பவன் கல்யாண்

தமிழ் சினிமா உலகினர் குறுகிய மனப்பான்மையுடன் உள்ளனர் என்றும் அவர்கள் அந்த மனப்பான்மையிலிருந்து வெளியே வர வேண்டும் என்றும் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.  
 
ஒரு பணியை நம் மக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்க கூடாது என்றும் தெலுங்கு சினிமா இன்று செழிப்பாக இருக்கிறது என்றால் அதற்கு அனைத்து மொழி பேசும் மக்களையும் நாங்கள் ஏற்றுக் கொண்டதுதான் என்றும் எல்லா மொழிகளும் சேர்ந்ததுதான் சினிமா என்றும் நம் மக்களுக்கு மட்டும் வேலை கொடுக்க வேண்டும் என்று யோசிக்க கூடாது என்றும் அது ஒரு குறுகிய மனப்பான்மை என்றும்  பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். 
 
சமுத்திரக்கனி தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் தெலுங்கு படங்களை இயக்குகிறார், அதேபோல் ஏஎம் ரத்னம் ஆந்திராவைச் சேர்ந்தவர் தான், ஆனால் தமிழ் படங்களை தயாரித்துள்ளார். அதுபோல் அனைவரும் ஒன்றிணைந்து தான் சினிமாவில் செயல்பட வேண்டும் அப்போதுதான் உலகளாவிய படங்கள் வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva