புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 12 மே 2022 (18:22 IST)

பத்தல பத்தல பாடல் விவகாரம்: கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார்

Pathala Pathala
கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல  என்ற பாடல் நேற்று வெளியான நிலையில் இந்த பாடலில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருப்பதாக சென்னை காவல்துறை ஆணையர் கமல்ஹாசன் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது 
 
இந்த பாடலில் மத்திய அரசை திருடன் என்று கூறும் வகையில் வரிகள் இருப்பதாகவும் ஜாதிய மோதல் ஏற்படுத்தும் வகையில் உள்ள கருத்துக்கள் இருப்பதாகவும் செல்வம் என்பவர் சென்னை காவல்துறை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் 
 
இந்தப் பாடலில் உள்ள சர்ச்சைக்குரிய வரிகளை நீக்க வேண்டும் என்றும் காவல்துறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்த படத்தை தடை செய்ய உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது