ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 5 மார்ச் 2023 (14:44 IST)

சர்வைவல் த்ரில்லராக உருவாகும் பருந்தாகுது ஊர்க்குருவி… கவனம் ஈர்த்த டிரைலர்!

உலகளவில் மிகவும் ரசிக்கப்படும் ஒரு சினிமா வகையாக சர்வைவல் த்ரில்லர் வகைப் படங்கள் இருந்து வருகின்றன. ஆனால் தமிழில் அரிதாகவே இந்த வகையிலான படங்கள் வெளியாகிவருகின்றன. அந்த வகையில் உருவாகி வருகிறது பருந்தாகுது ஊர்க்குருவி திரைப்படம்.

Lights On  Media தயாரிப்பில் இயக்குநர் கோ.தனபாலன் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி வரும் திரைப்படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”. பல புதிர்கள் நிறைந்த காட்டுக்குள் இருவர் மாட்டிக்கொள்ளும் சிக்கலான சூழலில், ஒருவர் மற்றொருவரை எப்படி காப்பாற்றுகிறார், அவர்கள் எப்படி உயிர் பிழைக்கிறார்கள் என்பதை ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில்,  சர்வைவல் திரில்லர் பாணியில் சொல்வதாக உருவாகிறது இந்த திரைப்படம்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.