புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (10:20 IST)

தன் படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்யும் பார்த்திபன்.. எந்த படம் தெரியுமா?

நடிகர் பார்த்திபன் எப்போதுமே தன்னுடைய வித்தியாசமான முயற்சிகளுக்காக பேசப்படுபவர்.

பார்த்திபன் இயக்கி, தயாரித்து அவர் மட்டுமே நடித்த ஒரு படம் தான் 'ஒத்த செருப்பு. உலகிலேயே ஒரு படத்தை ஒருவரே இயக்கி, தயாரித்து நடித்த ஒரு திரைப்படம் என்ற பெருமையை இந்த 'ஒத்த செருப்பு' திரைப்படம் பெற்றுள்ளது. ரிலீஸாகி பரவலான கவனத்தைப் பெற்ற இந்த திரைப்படம் நடுவர்கள் வழங்கும் சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது.

இப்போது இந்த படத்தை இந்தியில் அபிஷேக் பச்சன் நடிப்பில் ரீமேக் செய்து வருகிறார் பார்த்திபன். மேலும் அவர் நடிப்பில் இப்போது சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமான இரவின் நிழல் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து தற்போது அந்த படத்தின் ப்ரமோஷனில் கலந்துகொண்ட பார்த்திபன் தன்னுடைய ஒத்த செருப்பு திரைப்படத்தை விரைவில் ஹாலிவுட்டில் எடுக்க உள்ளதாக கூறியுள்ளார்.