டைட்டிலே பிரம்மாதமா இருக்கே... மீண்டும் அட்டகத்தி ஸ்டைலில் களமிறங்கும் பா ரஞ்சித்!
தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். இவர், தற்போது சர்பாட்டா பரம்பரை என்ற படத்தை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கியுள்ளார். இந்தப்படம் ஜூலை 22ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் பா. ரஞ்சித்தின் அடுத்தப்பட டைட்டில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தற்போது அட்டகத்தி ஸ்டைலில் ஒரு காதல் கதை இயக்கப்போகிறாராம். இந்த படத்திற்கு " “நட்சத்திரம் நகருகிறது” என டைட்டில் வைத்துள்ளார். வித்யாசமான இந்த டைட்டில் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது. விரைவில் இதன் நடிகர் நடிகைகள் குறித்த விவரம் வெளியாகும்.